3வது டி-20 போட்டியில் 26 ரன்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி..! அசத்திய சக்கரவர்த்தி..! - Seithipunal
Seithipunal


இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் நடந்து வருகிறது. இந்திய அணி, 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர், 20 ஓவரில் 09 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி 04 ஓவர்கள் பந்து வீசி 24 ரன் விட்டுக்கொடுத்து 05 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், 173 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 09 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 26 ரன்களில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியில்  ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் பெரிதாக இன்று சோபிக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் ஜமி ஓவர்டன் 03 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் ப்ரைடன் கார்ஸ் தலா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

https://sports.ndtv.com/cricket/ind-vs-eng-scorecard-live-cricket-score-england-in-india-5-t20i-series-2025-3rd-t20i-inen01282025247153


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

England won the 3rd T20 cricket match by 26 runs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->