முதல் டெஸ்ட் : 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
First Test England beat Sri Lanka by 5 wickets
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 21ம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, பேட்டிங் செய்து 236 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிலன் ரத்னாயகே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இலங்கை அணி 300 ரன்களை கடந்தது.
அரைசதம் அடித்த சண்டிமால் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கமிந்து மென்டிஸ் சதமடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார். . இதன் மூலம் இலங்கை 2-வது இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது
இதனையடுத்து இங்கிலாந்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது.தொடக்க வீரர் பென் டக்கெட் 11 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து வந்த ஜோ ரூட் அரைசதமடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
English Summary
First Test England beat Sri Lanka by 5 wickets