மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.! - Seithipunal
Seithipunal


இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் என்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

 இது குறித்து பேசிய அவர், மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து எனக்கு தெரியாது. அங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் செய்திகளை மட்டுமே அறிந்தேன். அது அவர்கள் யுத்தம் அவர்கள் மட்டும் போராடட்டும்.

தெரியாத ஒன்றை பற்றி பேசக்கூடாது. மல்யுத்த வீரர்கள் ஏராளமான பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganguly speech about wrestlers protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->