டி20 உலகக்கோப்பை : இந்திய அணியில் அஸ்வின் எதற்கு.? முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.

இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவுகளை பொறுத்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்ககா ஆகிய மூன்று அணிகளுக்கும் நாளை வெவ்வேறு அணிகளுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு சில இடங்களில் குறைகள் இருப்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 'இந்திய அணியில் தற்போது இருக்கும் குறை என்னவென்றால் அது சுழற்பந்துவீச்சு தான். இந்திய அணி ஒரு வ்ரிஸ்ட் ஸ்பின்னருடன் களமிறங்க வேண்டும். ஆனால் இந்திய அணியோ தொடர்ந்து அஸ்வினுக்கு மட்டுமே வாய்ப்பளித்து வருகிறது.

அஸ்வினால் பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு ஓரளவிற்கு பங்களிப்பு கொடுக்க முடியும் என்பதால் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்து வருகிறது. ஆனால் என்னை பொறுத்தவரையில் இது தவறான முடிவு அனைத்து போட்டிகளிலும் அஸ்வினின் பேட்டிங்கை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கும் சில போட்டிகளில் மட்டுமே அஸ்வினுடைய பங்களிப்பு தேவைப்படும்.

எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வினுக்கு பதிலாக யுஸ்வேந்திர சகாலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் ஒரு சில மைதானங்கள் சுழற்பந்து வீச்சிற்கும் சாதகமாக உள்ளது. இந்திய அணி இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gautam Gambhir speech about Indian team selection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->