ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி! அரை இறுதிக்கு தகுதி பெற்றார் லக்ஷயா சென்.!
German open Badminton
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான லக்சயா சென் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வெண்கலம் வென்றிருந்த இந்தியாவின் இளம் நடசத்திர வீரர லக்ஷயா சென், ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டித்தொடரின் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சக வீரரான எச்.எஸ்.பிரனோயை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென், 21-15, 21-16 என்ற நேர்செட்களில் எளிதாக சக வீரரை வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சன்னை எதிர்கொண்டு, 10-21, 21-23 என்ற செட்கணக்கில் தோல்வி அடைந்தார்.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் லக்சயா சென், முன்னாள் உலக சாம்பியனான விக்டரை எதிர்கொள்ள உள்ளார்.