ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி! பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி.! - Seithipunal
Seithipunal


ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் தோல்வியடைந்த பி.வி. சிந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரான பி.வி. சிந்து, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரநிலையில் பின்தங்கி இருக்கும் சீன வீராங்கனை ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

முதல் செட் ஆட்டத்தில் இருவரும் 5-5 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து பிரேக் செய்த ஜாங் யி மேன், அதன்பின்னர் தொடர்ந்து 6 புள்ளிகளை பெற்றார். 

பி.வி.சிந்து தொடர்ந்து பெற முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் ஜாங் யி மேன் முதல் செட்டை 14-21 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் கடுமையாக போராடிய பி.வி. சிந்து, 21-15 என கைப்பற்றினார். 

இதனையடுத்து, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் ஜாங் யி மேன் மீண்டும் சிந்துவுக்கு கடும் சவால் அளித்து அந்த செட்டை எளிதாக கைப்பற்றினார்.

ஆட்ட நேர முடிவில் 14-21, 21-15, 14-21 என்ற செட்கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். அடுத்த வாரம் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் பி.வி.சிந்துவுக்கு இந்த தொடர் ஏமாற்றமாக அமைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

German Open Badminton PV Sindu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->