#INDvsAUS || கடைசி போட்டியில் 4 பேருக்கு ஓய்வு! தமிழக வீரருக்கு வாய்ப்பு கிட்டுமா? எகிறும் எதிர்பார்ப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை 2-0 கைப்பற்றி உள்ளது. இந்த நிலையை கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை பிற்பகல் 1:30 மணி அளவில் தொடங்க உள்ளது. 

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியிலிருந்து 4 வீரர்களுக்கு நாளை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் நாளை நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரோகித் ஷர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தரும் கடைசி ஒரு நாள் போட்டியில் களம் இறக்கப்படலாம்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு வாஷிங்டன் சுந்தருக்கு 3வது ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அக்சர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வாஷிங்டன் சுந்தர் அவரிடத்தை நிரப்புவதற்காக நாளைய போட்டியில் இடம் பெறலாம். முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் செயல்பட்ட நிலையில் கடைசி ஒரு நாள் போட்டிக்கு ரோகித் ஷர்மா தலைமை தாங்கி வழி நடத்த உள்ளார். கடைசி ஒரு நாள் போட்டி நிறைவு பெற்ற பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gill Hardik Shami Thakur has been rested for 3rd ODI vs Australia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->