அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஹர்பஜன் சிங்.! விடுத்த கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும், ஹர்பஜன்சிங் ஐபிஎல் 2020இல் இருந்து முழுவதும் விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிர்வாகத்திடம் சொந்த காரணங்களினால் விலகிக் கொள்வதாகவும், தன்னை இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், "அருமை நண்பர்களே, இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளேன். இது மிகவும் கடினமான நேரம். சிஎஸ்கே நிர்வாகம் ஒத்துழைப்பை அளித்துள்ளது. சிறந்த ஐபிஎல் போட்டியாக அவர்களுக்கு அமையவேண்டும். எல்லோரும் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை விடுக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, சுரேஷ் ரெய்னாவுக்கும் சிஎஸ்கே அணிக்கும் மோதல் ஏற்பட்டது. அவரும் விலகுவதாக கூறி விட்டு நாடு திரும்பியுள்ளார். தற்போது ஹர்பஜன் சிங்கும் விலகுவதாக கூறியுள்ளது, சிஎஸ்கே அணி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbajan singh recent tweet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->