#Justin: ஓய்வை அறிவித்த ஹர்பஜன் சிங்.. மொத்தமாக க்ளோஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 236 ஒருநாள் போட்டிகள் 28 டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது தமிழ் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாட பட்டவர். 

இவர் பேசுகின்ற தமிழ் அனைவருக்கும் பிடிக்கும். சமீபத்தில் சதீஷ் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இதன்பிறகு மேலும் சினிமா துறையில் பங்காற்ற இருக்கிறார். 

இத்தகைய நிலையில் சற்று முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும், அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இருபத்தி மூன்று ஆண்டு கால பயணத்தை மறக்க முடியாததாகவும் அழகானதாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி." என்று ட்வீட் செய்துள்ளார். 

அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளது ஹர்பஜன்சிங் ரசிகர்களுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவரது முடிவை மதித்து தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harbhajan Singh retirement announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->