தோனியின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா.!!
Hardik Pandiya 5 Time IPL Cup
ஐபிஎல் 15 வது சீசனில் குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அறிமுகமான முதல் தொடரிலே குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹார்திக் பாண்டியா.
இதற்கு முன்பு தோனி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய மூவர் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் அவர்கள்.இந்த வரிசையில் ஹார்திக் பாண்டியா இணைந்துள்ளார். இது ஹர்திக் பாண்டியாவிற்கு 5வது ஐபிஎல் கோப்பை ஆகும். 2015, 2017, 2019, 2020 ஆகிய நான்கு சீசன்களில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடினார். கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்றுள்ளார். எனவே மொத்தமாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா.
2015ஆம் ஆண்டில் தான் ஐபிஎல்லில் ஹார்திக் பாண்டியா அறிமுகமானார். அதிலிருந்து கடந்த 8 சீசன்களில் 5 முறை கோப்பையை வென்ற அணியில் ஹார்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 6 முறையும், தோனி 4 முறையும் வென்றுள்ளனர். தற்போது ஹார்திக் பாண்டியா 5 முறை கோப்பையை வென்று, டோனியை முந்தியுள்ளார்.
English Summary
Hardik Pandiya 5 Time IPL Cup