இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது.. வருங்காலத் தலைமுறையினர் பேசுவார்கள்.. ஹர்திக் பாண்டியா பெருமிதம்.!!
hardik pandiya press meet for ipl final
ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷித் கான், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணி 18.1 முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த சாம்பியன் பட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. ஏனென்றால் நான் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவது பற்றி பேசினோம்.
இந்த வெற்றி குறித்து வருங்கால தலைமுறையினர் பேசுவார்கள். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பயணத்தைத் தொடங்கிய குஜராத் தனி என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக் கூறினார்.
English Summary
hardik pandiya press meet for ipl final