வேற லெவல் ஆட்டம்! புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்ட்யா! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. 

தற்போதுவரை 4 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்று, தொடர் சமனில் உள்ளது.

இதில், நேற்று நடைபெற்ற 4வது ஆட்டத்தில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த 3 ஆட்டங்களில் தடுமாறிக்கொண்டிருந்த கில், இந்த ஆட்டத்தில் கில்லி போல அதகளம் செய்தார்.

மறுமுனையில் ஜெய்ஸ்வால் முடிந்ததால் அவுட் பண்ணுங்க என்று, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு சவால் விட்டு அதிரடியாக ஆடினார்.

இறுதியில் 17 ஓவர்களில், 1 விக்கெட்டை மட்டும் இழந்து 179 ரன் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

ஆட்டம் முடிந்துவிட்டதா? அவ்ளோதானா என்று ஜெய்ஸ்வால் வெள்ளந்தியாக கேட்டது ரசிகர்களின் மனம் கவர்ந்தது.

ஜெய்ஸ்வால் 84 ரன்னும், கில் 77 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், "மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எங்களுக்கு உற்சாகமூட்டியது, எங்களை மிகச் சிறப்பாக செயல்பட வைத்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் - ஜெய்ஸ்வாலின் திறமை மீது எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடி உள்ளனர். அவர்கள் ஆடிய விதம் அற்புதமாக இருந்தது" என்று ஹர்திக் பாண்ட்யா புகழ்ந்து தள்ளினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hardik pandya say subman gill jaiswal played brilliant IND vs WI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->