ஐபிஎல் கோப்பை தோனி கைகளுக்கு செல்ல வேண்டும் என்று விதியில் எழுதப்பட்டுள்ளது - ஹர்திக் பாண்ட்யா.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தோல்வி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹார்த்திக் பாண்டியா, இந்தப் போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

 எங்களால் முடிந்தவரை வெற்றிக்காக கடுமையாக போராடினோம். வந்துவிட்டது பேட்டிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இந்த போட்டியில் எங்கள் தோல்விக்கு நான் காரணம் எதுவும் கூற விரும்பவில்லை சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. 

 சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார் இறுதிப் போட்டியில் இதுபோன்ற விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. அதேபோல் எங்களது பந்து பேச்சாளர்களும் தங்களால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை செய்தனர்.

 இதுதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடந்தே தீரும் அதை நம்மால் மாற்ற முடியாது. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் என்பது எனது நம்பிக்கை எனக்கு தெரிந்த நல்ல மனிதர்களில் தோனி முதன்மையானவர். என் மீது கடவுள் இந்த போட்டியில் அதிக இரக்கம் காட்டினால் ஆனால் இந்த நாள் தோனிக்கானது சென்னை அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya speech about final defeat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->