முதல் இந்திய வீரன்! மகத்தான சாதனையை படைத்த ஹர்திக் பாண்ட்யா! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி டி20 ஆல் ரவுண்டுருக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் டி20 உலக கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளியாடி, இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு திருப்புமுனையாக இருந்த இந்திய அணி ஆல் கவுண்டர், இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலிடம் பிடித்து சாதனைப்படுத்துகிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் 144 ரன்களும், தனது பந்துவீச்சின் மூலம் 11 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியிருந்தார் ஹர்திக் பாண்ட்யா.

இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், சாதனையையும் ஹார்திக் பாண்டியா பெற்றுள்ளார். 

மேலும், இதே முதலிடத்தில் 222 புள்ளிகளுடன் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோய்னிஸ், நான்காவது இடத்தில் சிக்கந்தர ராசா, ஐந்தாவது இடத்தில் சாகிப் அல்ஹசன் உள்ளனர்.

இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டுருமான அக்சர்பட்டில் ஏழு இடங்கள் முன்னேறி, தற்போது பன்னிரண்டாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardik Pandya T20 allrounder 2024 ICC Ranking 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->