ரஞ்சி கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்.!
Hardik withdraws from Ranji
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு பந்து வீசாமல் இருந்து வருகிறார். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இவர் பந்து வீசாமல் பேட்டிங் மட்டுமே செய்து வந்தார். அந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறுவதில்லை. ஹர்திக் பாண்ட்யா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி அதிக ஓவர்கள் பந்து வீசி, மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என சவுரவ் கங்கூலி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்மாதம் தொடங்க உள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகி உள்ளார். அவர் விளையாடி வரும் ரஞ்சிக் கோப்பைக்கான பரோடா அணி அறிவிக்கப்பட்டது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சகோதரர் குர்னால் பாண்ட்யா பெயர் பரோட அணியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் ரஞ்சி கோப்பைக்கான பரோடா அணியில் இடம் பெறாததற்கு காரணம், ஐ.பி.எல். போட்டிகளில் புதிய அணியான அகமதாபாத் அணிக்கு கேப்டன் பொறுப்பு ஏற்க உள்ளதாகவும், அதில் சிறந்த முறையில் விளையாட வேண்டும் எனவும் அவர் திட்டமிட்டு ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Hardik withdraws from Ranji