இந்தியாவிடம் தோற்ற பிறகு ஹாங்காங் வீரர் செய்த நெகிழ்ச்சியான செயல்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஹாங்காங் கிரிக்கெட் வீரர் கிஞ்சித் ஷா, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மைதானத்தில் காதலை வெளிப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு இந்தியா-ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதின. இதில், டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாங்காங் வீரர் கிஞ்சித் ஷா தனது பெண் தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். கிஞ்சித் ஷா அந்த பெண்ணிடம் மைதானத்தில் முழங்காலில் அமர்ந்து திருமணத்திற்கு முன்மொழிந்தார். இப்படி செய்வதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அடுத்த நொடியே அவர் மகிழ்ச்சியில் அதனை ஏற்றுக்கொண்டு ஆம் என்று கூறுகிறார்.இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்கிறார்கள். ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் உடனடியாக இந்த தருணத்தை தங்கள் செல்போன்களில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கிஞ்சித் ஷாவின் இந்த காதல் ப்ரொபோசல் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hongkong player proposed to girlfriend in IND vs HK match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->