இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை விளையாட வைப்பது முட்டாள்தனம் - இயான் சாப்பல்.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அனைத்து அணிகளுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடத்தில் உள்ளது. 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்திலும் உள்ளது.

இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது நாளை நடைபெறும் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டிகளின் முடிவுகளை பொறுத்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்ககா ஆகிய மூன்று அணிகளுக்கும் நாளை வெவ்வேறு அணிகளுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒரு சில இடங்களில் குறைகள் இருப்பதால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான இயான் சாப்பல் இந்திய அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 'இந்த டி20 உலக கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கை விளையாட வைத்தது ஒரு முட்டாள்தனம். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த்தை அனைத்து போட்டியிலும் விளையாட வைத்திருக்க வேண்டும். ஒருவேளை தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல் ஆகியோரை நீக்காவிட்டாலும் ஒரு சில ஓவர்கள் மட்டுமே வீசும் அக்சர் படேலுக்கு பதிலாக ரிஷப் பந்த்தை விளையாட வைத்திருக்க வேண்டும்.

ஏனென்றால், ஆஸ்திரேலியா போன்ற பெரிய ஆடுகளங்களில் ரிஷப் பந்த் ஏற்கனவே அதிரடியாக விளையாடி மேட்ச் வின்னராக நிறைய அனுபவம் உள்ளது‌. ரிஷப் பந்தின் அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும்.

ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய மண்ணில் தேர்வு செய்தது தவறான முடிவு. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மைதானத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை கடந்த காலங்களில் வெளிப்படுத்திய ரிஷப் பந்த்திற்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ian Chappell speech about Indian team selection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->