உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் ஆப்கான் வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ICC T20 WC Afgan
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் விலகி உள்ளது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, இதுவரை விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் சுற்றுக்கும் முன்னேறி உள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை போன்ற பலம் வாய்ந்த அணிகள் வெளியேறியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி லீக் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உகாண்டாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது முஜீப் உர் ரஹ்மானுக்கு வலது கையின் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறவே தற்போது உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் விலகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முஜீப் உர் ரஹ்மானுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஒரு பேட்ஸ்மேன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.