19 வயது: டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி! - Seithipunal
Seithipunal


19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணியின் கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்களுடனும், ஜன்னாட்டுல் 14 ரன்களுடனும் அதிகபட்ச ரன்களை எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷப்னம் ஷகில், ஜோஷிதா மற்றும் கொங்கடி த்ரிஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கொங்கடி த்ரிஷா 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். சானிகா சால்கே 11 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC un19 woman world cup 2025 ind into semifinal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->