இது ஒன்னு போதும்! இந்திய அணியை எளிதாக வீழ்த்துவோம் - கொக்கரிக்கும் பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் மட்டுமே நேரடியாக மோதி வருகின்றன.

எனவே இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டங்கள் இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்டத்தின் மீதான ரசிகர்களின் உட்சபட்ச எதிர்பார்ப்பு காரணமாக, இரு அணி வீரர்களும், மனதளவில் அழுத்தத்தினுடைய விளையாடுவதாக, முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்த ஆழத்தை கையாளும் திறன் பெற்று இருப்பதாகவும், களத்தில் தனியாக நின்று இந்திய அணியை வீழ்த்துவோம் என்றும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வருவதே கடந்த 2021 ஆம் ஆண்டு வரை வரலாறாக இருந்தது.

ஐக்கிய அமீரகத்தில் நடந்த 2021 உலக கோப்பை டி20 தொடரில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி அபாரமான ஒரு வெற்றியை பதிவு செய்து, அந்த வரலாற்றை மாற்றியமைத்தது.

அதுவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பாபர் அசாமும், ரிஸ்வானும் ஆட்டம் இழக்காமல் ஒரு அபார வெற்றியை பதிவு செய்து, ஐசிசி தொடர்களில் இந்திய அணியை முதல் முறையாக வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து காயம் பட்ட சிங்கமாக எழுந்துவந்து இந்திய அணி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில், விராட் கோலியின் அசுரத்தனமான ஆட்டத்தினாலும், ரவிச்சந்திரன் அஸ்வினின் அசாத்திய திறமையினாலும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மீண்டும் தோல்வியை பரிசாக வழங்கியது.

தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் நவம்பர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ள ஆட்டம், உச்சகட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியை மீண்டும் வீழ்த்தி பாகிஸ்தான அணி ஒரு வெற்றியை பதிவு செய்யுமா? அல்லது ஐசிசி தொடரில் ஒரு முறை தான் உங்களுக்கு வெற்றி, மீண்டும் அந்த வெற்றி வாய்ப்பை நாங்கள் வழங்க மாட்டோம் என்று, இந்திய அணி அசாத்தியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா? என்ற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றியுள்ளது.

இந்த நிலையில், இந்தியா -பாகிஸ்தான் அணி மோத உள்ள இந்த ஆட்டம் குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவிக்கையில், "இந்திய அணியுடன் நாங்கள் விளையாடும் போது இது போன்ற ஒரு மன அழுத்தம் எங்களுக்கு இருக்காது.

இந்திய அணியுடன் நாங்கள் அடிக்கடி விளையாடுவோம். வெற்றி -தோல்வி எங்களை பெரிதாக பாதித்ததில்லை.

ஆனால் ஐசிசி உலக கோப்பை தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனால் இரு அணி வீரர்களுக்கும் மும்மடங்காக அழுத்தம் அதிகரித்தது.

ஆனால், தற்போது இருக்கக்கூடிய எங்கள் அணி வீரர்கள், அந்த அழுத்தத்தை சரியாக கையாளுகின்றனர். 

நாங்கள் உலககோப்பை தொடர்களில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தோம். ஆனால் இப்போதிருக்கும் வீரர்கள், அந்த மன அழுத்தத்தை சமாளித்து, வெற்றியை பதிவு செய்துள்ளார்கள்.

பாகிஸ்தான் அணியின் மேட்ச் வின்னர்கள், இந்த முறையும் இந்திய அணியை வீழ்த்துவது மட்டுமல்லாமல், இந்த உலகக் கோப்பையையும் வென்று காட்டுவார்கள்.

எங்கள் அணி வீரர்கள் தற்போது வலிமையான நிலையில் உள்ளனர். எனவே இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் அது இந்தியாவில் நடந்தாலும், பாகிஸ்தானில் நடந்தாலும், வேறு எங்கு நடந்தாலும், அந்த ஆட்டத்தைப் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

எங்கள் அணி வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி, களத்தில் திட்டம் வகுத்து வெற்றியை காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் அணியில் மேட்ச் வின்னர்கள் அதிகம் உள்ளனர். தனியாகவே ஆடி எந்த ஒரு அணியும் தோற்கடிக்கும் அளவுக்கு எங்கள் அணி வீரர்கள் தயாராகி உள்ளனர்.

இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஒரு அணியாக களம் இறங்கும், தனியாகவே நின்று பல ஆட்டங்களை வென்று காட்டுவோம். கோப்பையை வெல்வோம்" என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 IND vs PAK match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->