ICC WC 2023 | ஒரு டிக்கெட் அரைக்கோடி ரூபாய் அப்பே!   - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆட்டத்துக்கான முதல்நிலை டிக்கெட்கள் ஒரு மணி நேரத்துக்குள் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாம் நிலை சந்தை டிக்கெட்களின் விற்பனையை 'வியாகோகோ' ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

இதில் ஒரு அதிர்ச்சி செய்தி என்னவென்றால், ஆட்டம் நடக்கும் மைதானத்தின் சவுத் பிரீமியம் ஈஸ்ட்-3 கேலரி பகுதி டிக்கெட்டின் விலை ரூ.21 லட்சம் என்றும், மேல் அடுக்கு பிரீமியம் டிக்கெட்டின் விலை ரூ.57 லட்சம் என்றும் விற்பனை செய்யப்படுவதுதான்.

இதையும் விட பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்றும் உள்ளது. இரண்டே இரண்டு டிக்கெட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான்-இந்தியா மோதும் ஆட்டம் மட்டுமில்லை. மற்ற ஆட்டங்களில் டிக்கெட் விலையும் ரூ.41 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விலை ரூ.2.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 IND vs PAK match ticket in online


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->