என்னங்க இப்படி ஏமாத்துறிங்க - இந்திய அணியின் முன்னாள் வீரர் கொந்தளிப்பு!
ICC WC 2023 match ticket Rate issue
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் டிக்கெட் விற்பனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை 57 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்-இந்தியா மோதும் ஆட்டம் மட்டுமில்லை. மற்ற ஆட்டங்களில் டிக்கெட் விலையும் ரூ.41 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் இதற்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் பகுதி, பகுதியாக ரிலீஸ் செய்து விற்பனை செய்யப்படும் முறையானது சரியில்லை. இது தவறு.
டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு இணையதள பயன்பாட்டை சரியாக கையாளத் தெரியாமல் இப்படி செய்கிறதா?
குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக டிக்கெட்டுகளை ரிலீஸ் செய்து விற்பனை செய்வது கண் துடிப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது.
இவர்கள் எப்படி டிக்கெட்டை விற்பனை செய்கிறார்கள்? யாரிடம் எல்லா டிக்கெட்டுகளும் விற்கப்படுகிறது என்பது குறித்து விரிவான தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிரிக்கெட்டில் முக்கிய அங்கமான ரசிகர்களை, பொய் உத்திரவாதங்கள் கொடுத்து ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் காட்டமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
English Summary
ICC WC 2023 match ticket Rate issue