பாகிஸ்தானை பதம் பார்த்த நெதர்லாந்து! போராடி காப்பற்றிய 4 வீரர்கள்!
ICC WC 2023 PAK vs NED 1st half
உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பந்துவீச்சு பெரும் பேசு பொருளாகியுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இன்று நடைபெற்றுவரும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகர் சமன் 12 ரன்னுக்கும், இமாம்-உல்-ஹக் 15 ரன்னுக்கு அவுட்டாகினர்.
நட்சத்திர ஆட்டக்காரரும், பாகிஸ்தான் அணியின் கேப்டனுமான பாபர் அசாம் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களை பதறவைத்தார்.
10 ஓவர்களில் 44 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை, ரிஸ்வான் - சஹில் ஜோடி நிதானமான ஆடி மீட்டு எடுத்தது.
இருவரும் தலா 68 ரன்னுக்கு தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து முஹம்மது நவாஸ் - சதாப் கான் பார்ட்னர் ஷிப் அமைத்து ஆடினர்.
இந்த ஜோடி முறையே 39, 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்களை சேர்த்தது.
நெதர்லாந்து பந்துவீச்சை பொறுத்தவரை டி லீடே 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கி ஆடி வருகிறது.
English Summary
ICC WC 2023 PAK vs NED 1st half