பாகிஸ்தானை பதறவிட்ட நெதர்லாந்து! தொடக்கமே தாறுமாறான ஆட்டம்! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பந்துவீச்சு பாகிஸ்தான் ரசிகர்களை பதறவைத்துள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் அதிகபட்ச ரன்ரேட்டையும் நியூசிலாந்து அணி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்றுவரும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. 

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமேஅதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபகர் சமன் 12 ரன்னுக்கும், இமாம்-உல்-ஹக் 15 ரன்னுக்கு அவுட்டாகினர்.

நட்சத்திர ஆட்டக்காரரும், பாகிஸ்தான் அணியின் கேப்டனுமான பாபர் அசாம் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து பாகிஸ்தான் ரசிகர்களை பதறவைத்தார்.

10 ஓவர்களில் 44 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை, ரிஸ்வான் - சஹில் ஜோடி நிதானமான ஆட்டத்தால் மீட்டு வந்துள்ளது.

தற்போதுவரை பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு, 72 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 PAK vs NED toss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->