இந்த 4 பேரு தான்... பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே சொல்லும் ரகசியம்! - Seithipunal
Seithipunal


ஜஸ்பிரீத் பும்ரா காயத்தில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளது, இந்திய கிரிக்கெட் அணிக்கு வலு சேர்த்துள்ளதாக, அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் உலகக் கோப்பை தொடருக்கு முழு உடற்தகுதியுடன் உள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "பும்ராவின் உடற்தகுதி முன்னேற்றத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அவரின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது. 

ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே தேர்வில் இருப்பார்கள்.

வீரர்களின் தேர்வை பொறுத்தவரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அது அணியின் நன்மைக்காகவே இருக்கும். இது வீரர்களுக்கும் தெரியும். 

ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை, அவர் தன்னை சிறப்பாக வடிவமைத்துக் கொண்டார். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

விதத்தால் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக நாங்கள் நீண்ட காலமாக உழைத்தோம். நாங்கள் அவரது பணிச்சுமையை நிர்வகித்து வருகிறோம்,

அணியின் கண்ணோட்டத்தில் அவர், விக்கெட் வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்தி கொடுப்பவராக திகழ்கிறார்.

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் ஆட்டங்களின் போதே திலக் வர்மாவின் பந்துவீச்சு திறனை நான் பார்த்திருக்கிறேன். அதனை மேம்படுத்தி வருகிறோம். அவர் ஓரிரு ஓவர்கள் வீசினால் அணிக்கு மேலும் பலன் கிடைக்கும் வைகையில் திட்டமிட்டு வருகிறோம்" என்று பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 Team india Fast Bowler


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->