மோசமான சாதனையை சமன் செய்த மற்றும் ஒரு அணி!  - Seithipunal
Seithipunal


ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணிகள் பட்டியலில் ஜிம்பாப்வே அணியின் சாதனையை தற்போது இலங்கை அணி சமம் செய்தது.

இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் இலக்கை எட்டி பிடித்து, தொடர் தோல்விக்கு முற்றுப்பி வைத்து, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதே சமயத்தில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த தோல்வியுடன் மோசமான ஒரு சாதனையையும் இலங்கை அணி சமன் செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 42 முறை தோல்வியை சந்தித்து முதல் இடம் பிடித்த ஜிம்பாப்வே அணியின் சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது. 

இந்த பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 தோல்விகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC WC 2023 ZIM and SL most loss match team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->