#BREAKING || வெற்றியை நோக்கி இந்திய அணி.! பரபரப்பான ஆட்டத்தில் சிறப்பான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வேண்டு முதலில் களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மூன்றாவது நாள் ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கே எல் ராகுல் 123 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து ரஹானே 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து, 327 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்குபேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பவுமா - குவின்டன் டி காக் ஜோடி தென்ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டது. இருந்தபோதிலும் பவுமா 52 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, குவின்டன் டி காக் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 130 ரன்கள் முன்னிலை உடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அசத்தலான பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் அடுத்தது ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இந்திய அணி 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடிவருகிறது.

இன்றைய கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்த போதிலும் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு கணிசமாக விக்கெட்டுகளும் விழுந்தது.

தற்போது வரை தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 73 ஓவர்கள் மீதமிருக்க 123 ரன்கள் எடுத்தால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுவிடும். 

அதே சமயத்தில் இந்திய அணி இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் வெற்றி பெற்று விடும். விக்கெட்டுகளை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசி வருகின்றனர். ஆட்டம் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND V SA BOXING DAY TEST last day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->