மிக மோசமான காயம்.! என்ன ஆச்சு பும்ராவுக்கு.! சோகத்தில் இந்திய ரசிகர்கள்.!
ind v sa bumrah injured
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. நேற்றைய 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டம் அரைமணிநேரம் முன்னதாகவே தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கே எல் ராகுல் 123 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து ரஹானே 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிக்கிஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து, 327 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். ரபடா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நான்குபேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பவுமா - குவின்டன் டி காக் ஜோடி தென்ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருந்தபோதிலும் பவுமா 52 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, குவின்டன் டி காக் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 130 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில், பந்துவீச்சின் போது இந்திய வீரர் பும்ராவுக்கு கணுக்காலில் மிக மோசமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவ குழு பரிசோதித்து வருகிறது. பும்ராவுக்கு பதில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்பட்டு உள்ளார்.