#INDvSA || ஆட்டத்தில் கடைசி பந்து., அந்த ஒரு ரன் .! தோல்வியை மறந்து கைதட்டிய இந்தியர்கள்.!
ind v sa one day match jan 19
இந்திய தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில், முதல் ஒரு நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களம் குவிண்டன் டி காக் 41 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.அவரைத் தொடர்ந்து மாலன் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, பவுமா உடன் கைகோர்த்த ரஸ்ஸி வான்டர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் சதம் விளாசினர்.
பவுமா 110 ரன்னுக்கு அவுட்டாக, ரஸ்ஸி வான்டர் டுசென் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் ஏடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 296 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, இதனையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், இந்திய அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் 12 ரங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானுடன் கைகோர்த்த, முன்னாள் கேப்டன் விராட் கோலி நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். இவர்களுக்குள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகியது.
இதில் ஷிகர் தாவன் 79 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, மறுமுனையில் ஆடிய விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 16 ரன்னுக்கும், ஷெர்யாஸ் அய்யர் 17 ரன்னுக்கும் அடுத்தடுத்து அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து வெங்கடேச ஐயர் இரண்டு ரன்னுக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுக்கவே, இந்திய அணி கிட்டத்தட்ட தோல்வியை தழுவி விட்டது என்று இந்திய ரசிகர்கள் முடிவு செய்தனர்.
ஆனால், அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் 'நான் இருக்கிறேன்.. என்னை மறந்து விட்டீர்களே' என்பதுபோல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரால் இந்திய அணியை வெற்றிபெற செய்ய முடியவில்லை. ஆனால், இந்திய அணி தோற்றது என்பதையே மறக்கவைத்துவிட்டார்.
ஆம், கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை, இருந்தபோதிலும் ஷர்துல் தாகூர் அரை செஞ்சுரி அடிப்பாரா? என்பதிலேயே இந்திய ரசிகர்களுக்கு ஆவாள்.
அதுவும் ஆட்டத்தின் கடைசி பந்தில் திரில்லாக ஒரு ரன் எடுத்து அரை செஞ்சுரியை ஷர்துல் தாகூர் நிறைவு செய்தார். இந்திய அணி தோற்று போதிலும், இந்திய அணி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலையும் உற்சாகத்தையும் இது கொடுத்துள்ளது.
50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வியை தழுவியது. சவுத் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த ஒருநாள் தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்றுள்ளது.
English Summary
ind v sa one day match jan 19