விமர்சனங்களுக்கு அதிரடி ஆட்டத்தால் பதிலடி கொடுத்த புஜாரா.! இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு.! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 

இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவருடன் அதிரடி ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் களமிறங்கினார்.

22 ரன்னுக்கு மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த புஜாரா மூன்று ரன்களுக்கும், அஜிங்கிய ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆட, அவரும் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே எல் ராகுல் தனது அரை சதத்துடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் மேட்சை, ஒன் டே மேட்ச் போல் ஆட, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தால், 50 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன், 46 ரன்னுக்கு தனது வபறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, ஜான்சன் அசத்தலாக பந்து வீசி 4 விக்கெட்களை எடுத்தார். ஒளிவியர் மற்றும் ரபடா தலா 3 விக்கெட்டுகளை கைபற்றினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரன் எடுக்க முடியாமல் திணறும் இவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறீறீர்கள் என்று இந்திய ரசிகர்களால் விமர்சனத்துக்கு உள்ளாகும் அஜிங்கிய ரஹானேவும், புஜாராவும், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

அதிலும் சட்டீஸ்வர் புஜாரா 42 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன், 35 ரன்களை எடுத்து அசத்தி உள்ளார். ரகானே 22 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்துள்ளார். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்களை சேர்த்துள்ளது. சவுத்ஆப்பிரிக்கா அணியை விட இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v SA Second Test Second Tday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->