3-வது டெஸ்ட் போட்டி.. இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா அபார வெற்றி.!
IND vs AUS 3rd Test match Australia won by 9 wickets
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி ரன் குவித்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 88 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியில் புஜாராவை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை இறுதியாக இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று 3ம் தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
English Summary
IND vs AUS 3rd Test match Australia won by 9 wickets