இன்று இந்தியா -வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணி பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


வங்கதேசம் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14- 18) காலை 9 மணிக்கு  சட்டகிராம் மைதானத்தில்  நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். மேலும், ரோஹித் சர்மாவுக்கு அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.  அவர்களுக்குப் பதிலாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டையும் தேர்வுக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இந்தியா-வங்காளதேசம் அணிகள் 11 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என 3 ஸ்பின்னர்கள் மற்றும் உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது

அணி விவரம்

வங்கதேச அணி 11 வீரர்கள் : 

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(c), முஷ்பிகுர் ரஹீம்(w), யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்.

இந்திய அணி 11 வீரர்கள்:

ஷுப்மான் கில், கே.எல். ராகுல் (கே), சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs BAN 1st test match India batting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->