இந்தியா - வங்கதேசம் கடைசி டெஸ்ட் கடைசி டெஸ்ட் போட்டி.. இந்தியா பௌலிங்.. அணியில் முக்கிய மாற்றம்.!
IND vs BAN 2nd test match India bowling
இந்திய மணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தொடரை நிர்ணயிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
அதன்படி, இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூர் மைதானத்தில் இன்று (டிசம்பர் 22 -டிசம்பர் 26) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் போன்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.
அதேபோல், வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் 2வது டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்திய அணியில் கடந்த போட்டிகள் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக மேக பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி 11 வீரர்கள் :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன்(கே), நூருல் ஹசன்(வி.கீ), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது.
இந்தியா அணி 11 வீரர்கள் :
கே.எல். ராகுல் (கே), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கீ), ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்
English Summary
IND vs BAN 2nd test match India bowling