இன்று வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி.? - Seithipunal
Seithipunal


இந்தியா வங்காளதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில்  1-0 என முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தொடரை நிர்ணயிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

அதன்படி, இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூர் மைதானத்தில் இன்று (டிசம்பர் 22 -டிசம்பர் 26) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா, சிகிச்சை பெற்று வரும் நிலையில்  2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

அதேபோல், வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் 2வது டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.  

இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

கே.எல்.ராகுல் (கே), ஷுப்மான் கில், புஜாரா (து.கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ), கே.எஸ்.பாரத் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர்,  முகமது  சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs BAN 2nd test match today starts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->