இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர்.. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா.. முதல் போட்டியில் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணியிடமும், நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியிடமும் தோற்று வெளியேறியது. தற்போது 2 சிறந்த அணிகளும் விளையாடுவதால் இந்த தொடர் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வளிக்கப்பட்டு லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில், 11 போட்டிகளில் இந்திய அணியும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டி20 தொடருக்கான அணி விவரம்

இந்திய அணி வீரர்கள் :

சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), ரிஷப் பந்த்(வி.கீ), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐரி  , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்.

நியூசிலாந்து அணி வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ T20 1st match today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->