#AsiaCup : காத்திருப்பு முடிந்தது., தொடங்கியது ஆட்டம்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது முகலூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். மேலும், நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்". என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், கடந்த 2003-ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் : ஆசிய கோப்பை 2022 : டி20 கிரிக்கெட் தொடரின் இன்று இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. 

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி தற்போதுவரை, 2.4 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 15 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs pak schin and rahul wish team india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->