இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி.. புஜாரா, ஸரேயாஸ் பொறுப்பான பேட்டிங்.. 278 ரன்கள் குவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கதேசம் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 278 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 14- 18) காலை 9 மணிக்கு  சட்டகிராம் மைதானத்தில்  நடைபெறநடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்கிறார். மேலும், ரோஹித் சர்மாவுக்கு அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் என 3 ஸ்பின்னர்கள் மற்றும் உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகியது.

அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே கில், ராகுல், விராட் கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 48 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் வழக்கம்போல அதிரடியாக விளையாட இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் பேட்டில் பட்டு போல்டானார்.

அதன் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் புஜாரா உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 90 ரன்களுக்கு அவுட்டானார்.

இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India 278 runs of against Bangladesh of 1st test match


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->