இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி !! - Seithipunal
Seithipunal


டி20யின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த மோதலில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாது அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்காலும், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சாலும் இந்திய அணி இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது. 

மேலும் வருகின்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. கயானாவில் மழை காரணமாக போட்டி இரவு 8.50 மணிக்கு டாஸ் போடப்பட்டு, சுமார் 9.15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் எட்டாவது ஓவரின் போது மழை பெய்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஷ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதனால்  இப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்த இந்திய வீரர்கள் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதை அடுத்து விராட் கோலி ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. மூன்றாவது ஓவரிலேயே விராட் கோலி 9 ரன்களில் ரிசி டாப்லியால் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ரிஷப் பந்த் 4 ரன்களில் ஜானி பேர்ஸ்டோவின் கையில் சாம் குரானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுபுறம், ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் இணைந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா, அடில் ரஷித் பந்தில் அவுட் ஆனார். மறுபுறம், சூர்ய குமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்டார். சூர்ய குமார் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்தார். 

அதை தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் குவித்தார், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுத்து தொடர்ந்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிவம் துபே டக் அவுட் ஆகி வெளியேறினார். மேலும் அக்சர் படேல் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிறிஸ் ஜோர்டானின் பந்தில் பில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் மண்டியிட்டது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 5 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவால் ஆட்டமிழக்க, ஜோஷ் பட்லர் 23 ரன்களில் அக்சர் படேலு ஓவரில் அவுட் ஆனார். மேலும் பட்டேலின் பந்தில் பட்லர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் இங்கிலாந்து அணி 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3-3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் விழுத்தினர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india defeated england and enters final match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->