19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஒரே ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி கடந்த 2003ஆம் ஆண்டு 38 வெற்றிகளை பெற்றுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ் 30 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 38 வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்திய அணி இந்தாண்டு விளையாடிய 56 போட்டிகளில் 38 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் போட்டிகளில் 31 போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், மற்ற போட்டிகளில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட 7 பேர் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளனர்.

மேலும், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 11 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட புதிய சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India team equalise australia most win calendar year


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->