#மகளிர் உலகக்கோப்பை : பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி.!
India team target to Pakistan 245
மகளிர் உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு 245 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மந்தனா 52 ரன்களும், தீப்தி ஷர்மா 40 ரன்களும், ஸ்னே ரானா 53 ரன்களும் பூஜா 67 ரன்களும் குவித்தனர்.
245 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
India team target to Pakistan 245