400 ரன்களை கடக்குமா இந்தியா! ஸ்ரேயாஸ், கில் சதத்துடன் இந்தியா அபார ஆட்டம்!
India will get 400 mark at Indore against Australia
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரானது, தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி இந்தூரில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் மிகவும் சிறியதாகவும், பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், இரண்டாவது பேட்டிங் செய்யும் பொழுது பணிபொழிவு இருக்கும் என்பதாலும், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டது. ஆனால் இந்த மைதானத்தை பொருத்தவரை இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிகம் வெற்றி பெற்று இருக்கிறது என்கிறது புள்ளி விவரம்.
இந்திய அணியின் ஆட்டமும் ஆஸ்திரேலியாவின் முடிவை தவறு என்று சொல்லும் வகையில் அமைந்தது. தொடக்கக்காரர் ருத்ராச் கெய்க்வாட் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து, 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக பறக்க விட, இருவரும் அடுத்தடுத்து சதத்தினை அடித்தனர்.
சதம் அடித்த வேகத்திலையே இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 90 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 105 ரன்கள் எடுத்து சீன் அபார்ட் பந்தில் ஷாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனை எடுத்து சுப்மன் கில் 97 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து க்ரீன் பந்துவீச்சில் கேரேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
35 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 249 ரன்கள் குவித்து அபார நிலையில் இருக்கிறது. இந்திய அணி இது போலவே அதிரடியாக விளையாடினால் நிச்சயம் இன்று 400 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு அதிரடி வீரர்களான லோகேஷ் ராகுல், இசான் கிஷன் சூரியகுமார் யாதவ் ரவீந்திர ஜடேஜா இருப்பதால் இந்திய அணி நிச்சயமாக 400 ரன்களை தொட்டுவிடலாம் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
டாஸ் என்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களும் நிலை குலைந்து சோர்ந்து போய் உள்ளனர்.
English Summary
India will get 400 mark at Indore against Australia