இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி.. கடைசி வரை போராடிய இலங்கை.. இந்திய அணி த்ரில் வெற்றி.! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது.

இதில், முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணியில் ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.

இதில், இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங் தேர்வு செய்தது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா - அக்சர் படேல் ஜோடி 68 ரன்கள் எடுத்தது.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 41 ரன்களும், இஷான் கிஷான் 37 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.

 அதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷிவம் மாவி 4 விக்கெட்களும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 2 runs against srilanka 1st T20 match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->