ஒரே போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்! இந்தியாவிற்கு தடகளத்தில் தாறுமாறு வெற்றி! - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகள போட்டிகள், நேற்று முதல் ஆரம்பமான நிலையில், நேற்று இந்தியாவிற்கு பெண்கள் குண்டு எறிதல் போட்டியில் கிரண் வெண்கல பதக்கத்தினை கைப்பற்றி கொடுத்திருந்தார். 

இன்றும் தடகள போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், 10000 மீட்டர் ஓட்டம் போட்டியில் இந்திய வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தியிருக்கின்றனர். 

இறுதி போட்டியில் பக்ரைன் வீரரிடம் இரண்டு வினாடியில் தங்கப் பதக்கத்தை இந்திய வீரர் கார்த்திக் குமார் நழுவவிட்டார். தங்கம் வென்ற பக்ரைன் வீரர் 28 நிமிடம் 13 வினாடிகளில் இலக்கை கடந்து தங்க பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். 

கார்த்திக் குமார் 28 நிமிடம் 15 வினாடிகளிலும், குளுவீர் சிங் 28 நிமிடம் 17 வினாடிகளிலும் இலக்கை கடந்து வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தினை கைப்பற்றி இருக்கிறார்கள். இது இந்தியாவிற்கு கிடைத்த 36 மற்றும் 37 ஆவது பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won silver and bronze in 10000 m at Asian games


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->