உலகக்கோப்பை இந்திய அணியில் மாற்றம்! ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வீரருக்கு அணியில் இடம்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அணியானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பிடித்த அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

முன்னதாக 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட பொழுது, தமிழக வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்ற சர்ச்சைகள் எழுந்தது. இதனையடுத்து நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் உள்ளே அழைக்கப்பட்டு இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியிருந்தார். இதனை அடுத்து காயத்திலிருந்து இன்னும் மீளாத அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார்.  

தற்பொழுது கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்திற்காக சென்றுள்ள இந்திய அணி அஸ்வினையும் அழைத்து சென்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக வெளியான செய்தியில், ரவிச்சந்திரன் அஸ்வின் அணியுடன் இணைகிறார் என செய்திகள் வெளியாகி இருக்கிறது. 

2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்ற பொழுது அந்த அணியில் விளையாடிய விராட் கோலி மட்டுமே தற்போதைய அணியில் இருந்தார். தற்போது அஸ்வின் இணைந்திருக்கிறார். ஒருவேளை இந்திய அணி உலக கோப்பை வென்றால் இவர்கள் இருவரும் இரண்டு உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெறுவார்கள். 

 

 

அணி : ரோகித், கில், கோஹ்லி, ஐயர், ராகுல், ஹர்திக், ஜடேஜா, அஷ்வின், குல்தீப், பும்ரா, சிராஜ், ஷமி, தாக்கூர், இஷான், சூர்யா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India world cup squad changed axar out ashwin in


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->