புயல் ஓய்ந்தது.. உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!!
Indian Cricket Players Returning India After Winning T20 World Cup
T 20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலமாக இந்தியா புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
T 20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற்று வந்தன. இதையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப் பரீட்சை நடத்தினர். அதில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளது.
இதையடுத்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி T 20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணியினர் ஜூலை 1ம் தேதி பார்படாஸில் இருந்து விமானம் மூலம் இந்தியா கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக, பார்படாஸில் புயல் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து பார்படாஸ் விமான நிலையம் மூடப் பட்டதால், இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே இந்திய வீரர்கள் உலகக் கோப்பையுடன் எப்போது நாடு திரும்புவார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், பிசிசிஐ தனி விமானம் ஏற்பாடு செய்து அதன் மூலம் இந்திய அணி வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், அணி நிர்வாகிகள் ஆகியோருடன் இந்திய பத்திரிகையாளர்களையும் தனி விமானத்தில் அழைத்து வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பார்படாஸில் புயல் ஓய்ந்து விட்டதால் இந்திய வீரர்கள் அனைவரும் விமானம் ஏறி விட்டதாகவும், இந்த தனி விமானம் நாளை காலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
Indian Cricket Players Returning India After Winning T20 World Cup