#BREAKING : இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா.!
Indian cricket team chief selector Chetan Sharma resigned
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் ஷர்மா பதவி வைத்து வருகிறார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களை வென்றதில்லை.
இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மொத்த தேர்வு குழுவும் கலைக்கப்படுவதாக பிசிசி அறிவித்தது.
இதனை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிய நிலையில், ஏற்கனவே தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் தனியார் டிவி சேனல் நடத்திய ரகசிய புலனாய்வில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்திருந்தார்.
அதில் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி விராட் கோலியுடன் இணக்கமாக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மாவையும் கேப்டனாக விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தார்
மேலும் இந்திய வீரர்கள் பலரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாகவும் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்திருந்தார். இவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிடம் அளித்துள்ளார். இதனையடுத்து சேத்தன் ஷர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.
English Summary
Indian cricket team chief selector Chetan Sharma resigned