இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இருந்தார். அவரது பயிற்சிக் காலம் சமீபத்தில் நடந்து முடிந்த T 20 உலகக் கோப்பைத் தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது 
 
அதில் இரண்டு முன்னாள் இந்திய வீரர்களின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புதிய தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீரை பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். மாறி வரும் கிரிக்கெட் சூழலின் சமகால மாற்றத்தை அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் கவுதம் காம்பீரை தேர்ந்தெடுத்துள்ளோம். 

இவர் இந்திய அணிக்காக விளையாடிய போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு, சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். எனவே தற்போது இந்திய அணியை இவர் சிறப்பாக வழி நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரை தேர்வு செய்துள்ளோம். பிசிசிஐ புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் காம்பீருக்கு முழுமையான ஆதரவை வழங்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Mens Cricket Team New Head Coach Announcement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->