இந்திய வீரரை தேனீ கொட்டியதால் பரபரப்பு!  நிம்மதி பெருமூச்சு விட்ட இந்திய அணி! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இந்திய அணி தனது ஐந்தாவது லீக் போட்டியில் நாளை தர்மசாலாவில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. கடந்த நான்கு போட்டியில் விளையாடிய இந்திய அணியில், கடைசியாக விளையாடிய மூன்று போட்டியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே அணியே ஆடி வருகிறது. 

இதில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயம் அடைந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அந்த ஆட்டத்தில் தொடரவில்லை. இதனை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் அணியில் அவருக்கு பதில் மாற்றுவீரராக யார் களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, 10 ஓவர் வீசும் பந்து வீச்சாளராக முகமது சமி சேர்க்கப்பட்டு, சூரியகுமார் யாதவ் அல்லது இஷான் கிசன் இருவரில் ஒருவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக விளையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் மாற்றுவீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் நாளைய போட்டியில் களமிறங்குவது கடினம் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று தர்மசாலாவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இஷான் கிஷனின் தலையில் தேனீ கொட்டியதால் அவர் உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். 

அதேபோல பயிற்சியின்போது மணிக்கட்டு பகுதியில் சூரியகுமார் காயம் அடைந்ததை எடுத்து அவரும் உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். ஏற்கனவே ஹார்டிக் பாண்டியாவும் அணியுடன் இல்லாத நிலையில், 15 வீரர்களில் மூன்று வீரர்கள் ஆட முடியாத சூழ்நிலையில் அஸ்வின் மட்டுமே எஞ்சிய வீரராக இருப்பார். பீல்டிங் க்கு மாற்று வீரர் வேண்டும் என்றால் கூட இல்லை என கைவிரிக்கும் பரிதாப நிலையில் இந்திய அணி சிக்கியிருக்கிறது.  

இந்த நிலையில் சூரிய குமார் யாதவின் காயமானது பெரிய அளவில் இருக்காது என்றும், வீக்கம் சரியாகிவிடும் எனவும் தற்பொழுது செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த செய்தி இந்திய அணிக்கு சற்று நிம்மதி பெருமூச்சு விடும் படியாக அமைந்திருக்கிறது. இருப்பினும் நாளை மதியம் வரை நேரம் இருப்பதால், இந்திய அணி ஐசிசியிடம் மாற்று வீரருக்கு அனுமதி கோரவும் வாய்ப்பு இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian players injured during the practice session in Dharamshala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->