கிழி.. கிழி.. கிழி.. ஆப்கானை கதறவிட்ட ரோஹித் - ரிங்கு! - Seithipunal
Seithipunal



ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில், ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தாலும், ரிங்கு சிங் அடித்த அபார அரை சதத்தாலும் இந்திய அணி 212 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 ஆட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்னுக்கும், சிவம் துபே 1 ரன்னுக்கும், விராட் கோலி, சாம்சன் டக்-அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ரிங்கு சிங் உடன் கைகோர்த்த ரோஹித் சாரமான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஆட்டம் போக போக அதிரடியாக விளையாடிய ரோகித் 41 பந்துகளில் அரை சதமும், அடுத்த 28 பந்துகளில் 70 ரங்களையும் குவித்து அசத்தினார். 

மொத்தம் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகள் என 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து இருவரை அட்டமிழக்காமல் களத்தில் நின்றார் கேப்டன் ரோகித் ஷர்மா.

மறுமுனையில் ரிங்கு சிங் சுனாமிபோல் ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்து, 6 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உட்பட 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அருப்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆப்கான் அணி, தற்போதுவரை விக்கெட்  இழப்பின்றி ஓவர்களில் ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvAFG 3rd t210 2024 Rohit sharma and ringu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->