ஆஸி, பவுலர்களை காண்டாக்கிய ஜெய்ஸ்வால், ராகுல்! கிண்டலா பண்ணுறீங்க... இந்தா வாங்கிக்க மாமே! - Seithipunal
Seithipunal


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 150 ரன்னில் அனைவரும் ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆவதை ஆஸி, வீரர்கள் ஏளனமாக முக பாவனை காட்டி கிண்டல் செய்து இருந்தனர்.

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் தட்டி தூக்கி இந்திய அணி பதிலடி கொடுத்தது. குறிப்பாக இந்தியாவின் பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களத்தில் ஆணி அடித்து நின்று முடிந்தால் விக்கெட் எடு என்று அதகப்படுத்தியுள்ளனர்.

முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால், 2-வது இன்னிங்சில் மிகச் சிறப்பாக ஆடி அசத்தியுள்ளார். கே.எல். ராகுலும் தனக்கே உரிய சீரிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 90 ரன்களும், கே.எல். ராகுல் 153 பந்துகளில் 62 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.

இதனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் மற்றும் நாதன் லயன் இவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் விருத்தி அடைந்து உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இரண்டாவது நாளின் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா ஆஸ்திரேலியாவை 218 ரன்கள் முன்னிலையுடன் வெற்றிக்கான பாதையில் முன்னேற்றியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsAUS  jaiswal KL Rahul 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->